ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட்டின் சர்ச்சை நாயகிகளில் ஒருவர் கங்கனா ரணவத். பாலிவுட் பற்றியும், வாரிசு நடிகர்கள், நடிகைகள் பற்றியும் அடிக்கடி வெளிப்படையாக சில கருத்துக்களைப் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்புபவர். அந்த விதத்தில் தற்போது மீண்டும் ஒரு கருத்தைப் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இந்த முறை கங்கனாவிடம் சிக்கியவர் நேற்று வெளியான 'பிரம்மாஸ்திரா' படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “அயன் முகர்ஜியை ஜீனியஸ் என்று சொன்னவர்களை உடனடியாக சிறையில் தள்ள வேண்டும். இப்படத்தை உருவாக்க அவர் 12 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். 14 ஒளிப்பதிவாளர்களை மாற்றியுள்ளார். 400 நாட்களுக்கு மேல் இப்படத்திற்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளார். 85 உதவி இயக்குனர்களை மாற்றியுள்ளார். 600 கோடி ரூபாயை சாம்பலாக்கி உள்ளார்.
'பாகுபலி' கொடுத்த வெற்றி காரணமாக, 'ஜலாலுதீன் ரூமி' என்ற படத்தின் பெயரை கடைசி நேரத்தில் 'ஷிவா' என மாற்றி மத உணர்வுகளை சுரண்ட முயன்றுள்ளனர். இத்தகைய சந்தர்ப்பவாதிகள் படைப்பாற்றல் இல்லாதவர்கள். வெற்றிப் பேராசை கொண்டவர்களை மேதைகள் என்று அழைப்பது என்பது இரவைப் பகல் என்றும் பகலை இரவென்றும் அழைப்பது போலாகும்,” என்று விமர்சித்துள்ளவர் 'பிரம்மாஸ்திரா'வின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹரையும் விடவில்லை.
“கரண் ஜோஹர் போன்றவர்களின் நடத்தையை விசாரிக்க வேண்டும். அவர் தனது திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்களை எழுதுவதை விட மற்றவர்களின் பாலியல் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். விமர்சனங்கள், போலி வசூல் விவரங்கள், ஸ்டார்களை அவரே விலைக்கு வாங்குகிறார். இந்த முறை இந்து மதத்தையும், தென்னிந்திய அலைகள் மீதும் சவாரி செய்ய முயன்றுள்ளார். எல்லாருமே திடீரென பூஜாரிகளாக மாறி தென்னிந்திய நடிகர்கள், ரைட்டர்ஸ், டைரக்டர்ஸ் ஆகியோரிடம் தங்கள் படத்தை பிரமோட் செய்ய பிச்சை எடுக்கின்றனர். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், திறமையான ரைட்டர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்ற திறமைசாலிகளை பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். 'பிரம்மாஸ்திரா' என்ற டிசாஸ்டரை சரி செய்ய, அவர்கள் கெஞ்சிச் சென்றவர்களை ஏன் முதலில் பிக்ஸ் செய்யவில்லை,” என்றும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மேலும், 'பிரம்மாஸ்திரா' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக வந்துள்ள சில பதிவுகளையும் கங்கனா ஷேர் செய்துள்ளார்.