'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் | தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு' | பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் |
பாலிவுட் நடிகரான சன்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. பாலிவுட்டின் தற்போதைய இளம் கதாநாயகி. 'லைகர்' படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்திருந்தார். பான் இந்தியா படமாக வெளியான 'லைகர்' பெரும் தோல்வியைத் தழுவியது. படத்தில் நடித்த அனன்யாவுக்கும் பாராட்டுக்கள் கிடைக்கவில்லை.
'லைகர்' தோல்வியை மறப்பதற்காக என்னவோ, அனன்யா தற்போது இத்தாலியில் உள்ள கேப்ரி என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். 'லைகர்' படத்திற்காக தொடர்ந்து பல ஊர்களுக்கும் சென்று படத்தை பிரமோட் செய்தார். அந்த அலைச்சலுக்காக தற்போது கேப்ரியில் ஓய்வெடுத்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக அந்த அழகிய கேப்ரி தீவிலிருந்து விதவிதமான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அவற்றில் பிகினி புகைப்படங்களும் உண்டு. 'லைகர்' தோல்வியில் அதிகம் பாதிக்கப்பட்டது படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்னாத்தான். அவர்களை விடவும் பாதிக்கப்பட்டது படத்தைப் பார்த்த ரசிகர்கள்தான். அனன்யாவின் அழகிய கிளாமர் புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்களுக்கு 'லைகர்' ஞாபகம் வர வாய்ப்பில்லை.