ஒரே நாளில் இரண்டு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சமந்தா | பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' |
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா. இந்த படம் நாளை செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த படம் வெற்றி பெற வேண்டும் பிரார்த்தனை செய்வதற்காக ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் உஜ்ஜயினில் உள்ள மஹாகாளேஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர்.
இந்த தகவலை ஆலியா பட முன்கூட்டியே சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து அங்கே கூடிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்..
போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தும் கூட ரன்பீர் கபூரால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் திரும்பினர். அதேசமயம் இவ்வளவு களேபரங்கள் நடந்த நிலையிலும் கூட, படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி மஹாகாளேஸ்வரர் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது..