கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி |
தமன்னா நடிப்பில் தற்போது இந்தியில் தயாராகியுள்ள படம் பப்ளி பவுன்சர். பிரபல இயக்குனர் மதூர் பண்டார்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான பெண் பவுன்சர் கதாபாத்திரம் நடித்துள்ளார் தமன்னா. பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட ஒரு பெண் சூழ்நிலை காரணமாக பவுன்சராக மாறுவதையும் அதன்பிறகு அவர் சந்திக்கும் சுவாரசியமான பிரச்சனைகளை மையப்படுத்தியும் இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 23ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் தமன்னா.
அப்படி ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், நிஜத்தில் நீங்கள் ஒருநாள் பவுன்சராக ஒருவருக்கு பணியாற்ற வேண்டும் என்றால் யாருக்கு பவுன்சராக பணியாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமன்னா கொஞ்சமும் யோசிக்காமல் ஹிருத்திக் ரோஷனுக்கு பவுன்சராக பணியாற்ற ஆசை என்று கூறினார். பின் என்ன நினைத்தாரோ, பாலிவுட் நடிகர் விக்கி கவுசலுக்கும் பவுன்சராக பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார் தமன்னா.