'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். அதிக படங்களில் நடிப்பவரும் இவர்தான். அதிக சம்பளம் வாங்குகிறவரும் இவர்தான். கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தும் இந்திய நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் . அக்ஷய் குமார் ஒரு படத்திற்கு 130 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக அக்ஷய்குமாரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகின்றன. சமீபத்தில் வெளியான பெல் பாட்டம், பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் படங்கள் தோல்வி அடைந்தன. படத்தின் பட்ஜெட்டில் 30 முதல் 40 சதவிகிதமே வசூலித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதனால் அக்ஷய்குமாரின் சம்பளத்தை குறைப்பது என்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அக்ஷய் குமாரும் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள படே மியான் சோஹ்டே மியான் படத்தில் நடிக்க 144 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சம்பளம் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 75 கோடி சம்பளம் பெறுகிறார்.