அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு | தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன் | வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ? |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. போலீசாருக்கு உறுதுணையாக நின்று அவர்களை காப்பாற்றும் ஒரு கைதி என்கிற வித்தியாசமான கதையம்சத்துடன் ஒரே நாள் இரவில் நடக்கும் பயங்கரமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது.
இந்த படம் தற்போது ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தர்மேந்திர சர்மா என்பவர் இந்தப்படத்தை இயக்கி வந்த நிலையில் தற்போது அவரை விலக்கிவிட்டு அஜய்தேவ்கனே டைரக்சன் பணியையும் கவனித்து வருகிறார்.
இந்த படத்தில் கார்த்திக்கு அடுத்ததாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நரேன். தற்போது அவரது கதாபாத்திரத்தை பெண் போலீஸ் அதிகாரியாக மாற்றிவிட்ட அஜய் தேவ்கன், அந்த கதாபாத்திரத்தில் தனது நீண்டநாள் தோழியும், நடிகையுமான தபுவை நடிக்க வைத்து வருகிறார்.