அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகை தபு. தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 52 வயதிலும் தற்போதும் இளமையாக நடித்து வருகிறார். கடைசியாக 'கிரீவ்' படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த 'டூன்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் டூன்: புரோப்ஹசி என்ற தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். டூன் படம் உலகத்திற்கு வெளியே கிரகங்களில் நடக்கிற மாதிரியான கதை. இதன் முதல் பாகம் ஏராளமான ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இது வெப் தொடராகவும் தயாராகிறது.