பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பாலிவுட் நடிகை தபு திரையுலகில் நுழைந்து 30 வருடங்களை கடந்து விட்டார். தமிழில் காதல் தேசம் படம் மூலம் அறிமுகமான இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட இரண்டு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தபு, இந்த வருடத்தில் நடித்த பூல் புளையா-2 மற்றும் கடந்த நவம்பர் மாதம் வெளியான த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. சந்திரமுகி படத்தின் ஹிந்தி பதிப்பாக பூல் புலையா படம் 2007ல் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக பூல் புலையா-2 உருவாகி வெற்றி பெற்றது.
அதேபோல த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமாக அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்து வெளியான திரிஷ்யம்-2வும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தபு நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் அஜய் தேவனுடன் கைதி ரீமேக்காக ஹிந்தியில் உருவாகிவரும் போலா என்கிற படத்தில் நடித்துள்ளார் தபு.
தமிழில் நரேன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் ஹிந்தியில் தபு நடித்துள்ளார். இந்த படமும் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப் படம் ஹிந்தியிலும் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்தவகையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இப்போதிருந்தே காத்திருக்கிறார் நடிகை தபு.