மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாவனா | பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் |
தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'ஜவான்'. சமீபத்தில் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியதாக செய்திகள் வெளியாகின.
அனைத்து மொழி ஓடிடி உரிமைகளையும் சேர்த்து சுமார் 125 கோடிக்கு அந்நிறுவனம் வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களின் ஓடிடி உரிமை 100 கோடியைத் தாண்டித்தான் விலை போகிறது. அந்த விதத்தில் ஷாரூக்கின் படமும் பிரம்மாண்டமாகத் தயாராகி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளதால் இந்த அளவிற்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் அவ்வளவு விலை கொடுத்து வாங்குகின்றன. ஓடிடியில் வெளியான பிறகு அவற்றை பல லட்சம் பேர் பார்ப்பதே இதற்குக் காரணம். ஷாரூக் நடித்து கடந்த சில வருடங்களாக படங்கள் எதுவும் வரவில்லை. எனவே, 'ஜவான்' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. எனவேதான் ஓடிடி நிறுவனம் அவ்வளவு விலை கொடுத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.