இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் படம் டார்லிங்ஸ். ஷாருக்கான் மனைவி கவுரி கானுடன் இணைந்து ஆலியாபட் தயாரித்து, நடிக்கிறார். அவருடன் ஷெபாலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனில் மேகா ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷால் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். ஜஸ்மீத் கே.ரீன் இயக்கி உள்ளார்.
மும்பையின் நெருக்கடியான பகுதியில் வாழும் நடுத்தர மக்களின் கதை. அந்த கதையின் ஊடாக ஒரு தாய்க்கும், மகளுக்குமான உறவை சொல்லும் படம். வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.