மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | கே.எஸ் ரவிக்குமார் ஒரு கோழை ; முன்னாள் அமைச்சர் காட்டம் | மோகன்லாலின் படத்தில் அறிமுகமாகும் நடிகையின் மகள் | தொடர் தோல்விகளால் தடுமாறும் நயன்தாரா | ராஷ்மிகாவால் 'புஷ்பா 2'க்கு கூடும் மவுசு |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தவர் ராஜ் பாப்பர். 1977ம் ஆண்டு முதல் 2016 வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இன்ஷாப் க தர்சு, அகர் ந ஹோட், ஆஜ் கி ஆவாஸ், தலால், யாரான படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் குதித்த ராஜ்பாப்பர், அதன்பிற சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இந்த கட்சியின் சார்பில் 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் அதிகாரியை தாக்கியதாக விஜிர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு லக்னோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ராஜ் பாப்பர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அரசு அதிகாரியை தாக்குதல், பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய தண்டனை சட்ட விதிகளின் படி அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 8 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ராஜ் பாப்பர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.