ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி. இதில் நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை, பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன் பெற்றிருந்தார். அவரே கார்த்தி நடித்த கேரக்டரில் நடிப்பதாகவும் அறிவித்திருந்தார். இதன் படப்பிடிப்பு மும்பையில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. படத்தை அஜய் தேவ்கனின் உறவினரான தர்மேந்திரா இயக்கி வந்தார்.
தர்மேந்திர ஷர்மாவின் இயக்கத்தில் திரும்பி இல்லாத அஜய்தேவ்கன் அவரை வெளியேற்றி விட்டு படத்தை தானே இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே 'யு மி அவுர் ஹம்', 'ஷிவாய்', 'ரன்வே 34' ஆகிய படங்களை இயக்கியவர். போலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த வருடம் மார்ச் 30ம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.