நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படம் மூலமாகவும் புருவ அழகியின் பிரபலம் காரணமாகவும் தானும் பிரபலமானவர் அந்த படத்தின் இயக்குனர் ஒமர் லுலு. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சௌபின் சாகிர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக சில ஸ்கிரீன் ஷாட்டுகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து இயக்குநர் ஓமர் லுலுவுக்கு ரசிகர்களிடமிருந்து கண்டனங்கள் குவிய ஆரம்பித்தன.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் ஓமர் லுலு, தனக்கோ தனது சோசியல் மீடியா பக்கத்தை நிர்வகித்து வரும் அட்மின் நபர்களுக்கோ இந்த விஷயத்தில் துளியும் தொடர்பு இல்லை என்றும் இது குறித்து தனது அட்மின் நபர்களுக்கு கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றும், ஒருவேளை தனது சோசியல் மீடியா பக்கம் ஹேக் செய்யப்பட்டு இதுபோன்ற அவதூறு செய்தி பரப்பப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சௌபின் சாஹிர் மற்றும் அவரது ரசிகர்களிடம் இதுதொடர்பாக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மாதம் இதேபோன்று இவரது சோசியல் மீடியா பக்கத்தில் மம்முட்டி குறித்து இவர் அவதூறாக கருத்து பதிவிட்டதாக இதேபோன்று சில ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியாகின. இதையடுத்து ஒருவேளை ஓமர் லுலு சொல்வது போல அவரது சோசியல் மீடியா கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தற்போது ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர்.