அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு | தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன் | வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ? |
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான குப்ரா சயித், 'சுல்தான், ரெடி அண்ட் சிட்டி ஆப் லைப் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'ஓபன் புக்' என்ற பெயரில் தனது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார். இதில் அவர் சிறுவயதில் இருந்து அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : எனக்கு நடந்த இந்த பாலியல் துன்புறுத்தல்களை என் மீது கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. பாலியல் துன்புறுத்தல் அனுபவத்தைப் பற்றி பேசுவது அவ்வளவு எளிதானது அல்ல. அது நீண்ட நாள் காயத்தை தரும். பாலியல் குற்றங்களை பகிர்ந்து கொள்ளும்போது மக்களிடமிருந்து எதிர் விமர்சனங்களை வரும். இதனால் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் சமூகம் நினைக்கிறது. இந்த மனோபாவம் சில ஆண்களை ஊக்கப்படுத்தத்தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.