ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
அசாமிய திரைத்துறையில் முன்னணி இளம் நடிகராக இருந்தவர் கிஷோர் தாஸ். நடிகர் மட்டுமல்லாது முன்னணி அசாமிய பாடகரும்கூட. 300க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். கடைசியாக 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற அசாமிய படத்தில் நடித்து இருந்தார்.
31 வயதான கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக கவுகாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கொண்டு வரப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அசாம் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வரின் வேண்டுகோள்படி சென்னையிலேயே கிஷோரின் இறுதி சடங்குகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது.