பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பாலிவுட்டில் 12 வருடங்களுக்கு முன் சல்மான்கான் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் தபாங். அந்த படத்தை பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் கப்பார்சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குனர் ஹரிஷ் சங்கர். தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் படங்களை இயக்கி வந்த ஹரிஷ் சங்கர் தற்போது மீண்டும் பவன் கல்யானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் மும்பையில் சல்மான்கானுடன் ஹரிஷ் சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தின. அடுத்ததாக சல்மான்கானை இயக்குவதற்காக ஹரிஷ் சங்கர் தயாராகி வருகிறார் என்றும் அதன் முன்னோட்டமாக தான் இந்த சந்திப்பு என்றும் கூட செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் சல்மான் கானுக்காக ஹரிஷ் சங்கர் ஒரு கதையை தயார் செய்வது செய்து வருவது உண்மைதான் என்றும், ஆனால் உரிய நேரத்தில் அதை சல்மான்கானிடம் அவர் சொல்லுவார் என்றும் இரு தரப்புக்கும் நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகின்றனராம்.