காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் நேரடி ஹிந்திப்படங்களைக் காட்டிலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.
ஹிந்தியில் மிகக் குறைந்த நாட்களில் ரூ.250 கோடி வசூலைத் தாண்டி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஏழே நாட்களில் அந்த வசூலைத் தொட்டுளளது. இதற்கு முன்பு 'பாகுபலி 2' படம் எட்டு நாட்களில் ரூ.250 கோடி வசூல் புரிந்ததுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 'கேஜிஎப் 2' முறியடித்துள்ளது.
நேரடி ஹிந்திப் படங்களில் 'டங்கல், சஞ்சு, டைகர் ஜிந்தா ஹை' ஆகிய படங்கள் 10 நாட்களில் ரூ.250 கோடி வசூலைக் கடந்துள்ளன. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இரண்டு தென்னிந்தியப் படங்கள் இந்தப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 'கேஜிஎப் 2' ஹிந்தியில் ரூ.300 கோடியைக் கடந்துவிடும்.