10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

இந்தியத் திரையுலகில் நேரடி ஹிந்திப் படங்களின் டிரைலர்களுக்குப் போட்டியாக 'கேஜிஎப் 2' ஹிந்தி டிரைலர் மற்றுமொரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த டிரைலர் யு டியூபில் தற்போது 100 மில்லியன் சாதனையைக் கடந்துள்ளது.
ஹிந்தித் திரையுலகத்தில் இதுவரையில் “வார், பாகி, பாகுபலி 2, ஜீரோ, ஹவுஸ்புல் 4, தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான், சூர்யவன்ஷி, கபீர் சிங், டைகர் ஜிந்தா ஹை, சாஹோ” ஆகிய படங்களின் டிரைலர்கள்தான் 100 மில்லியன் சாதனையைக் கடந்துள்ளன.
அவற்றில் 'வார்' டிரைலர் இதுவரையிலும் 132 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தெலுங்கிலிருந்து ஹிந்திக்குப் போன 'பாகுபலி 2' டிரைலர் 123 மில்லியன் பார்வைகளையும், 'சாஹோ' டிரைலர் 102 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
'கேஜிஎப் 2' டிரைலர் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக, 27 நாட்களில் இந்த 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஷாரூக்கான் நடித்த 'ஜீரோ' பட டிரைலர் 31 நாட்களில் 100 மில்லியன் சாதனையைப் படைத்திருந்தது. அந்த சாதனையை டப்பிங் படமான 'கேஜிஎப் 2' முறியடித்துள்ளது.
ஏற்கெனவே, 'கேஜிஎப் 2' டீசர் இந்திய அளவில் 257 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது.