‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் மோகன்ராஜா இயக்க, சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க 'காட் பாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.
மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிக்க ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் சம்மதித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. அதன் படப்பிடிப்பில் சல்மான் கான் கலந்து கொண்டுள்ளார்.
“காட்பாதர் குழுவுக்கு வாருங்கள் சல்மான் பாய். உங்கள் வருகை ஒவ்வொருவரையும் வலிமையாக்கி, உற்சாகத்தை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. உங்களுடன் திரையைப் பகிர்வது முழுமையான மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் படத்தில் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு 'மேஜிக்கல் கிக்'ஐத் தரும் என்பதில் சந்தேகமில்லை,” என சல்மானை வரவேற்றுள்ளார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி ஏற்கெனவே சில ஹிந்திப் படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், சீனியர் ஹீரோவான அவர் சல்மான்கானை வரவேற்று பதிவிட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது. இப்படம் மூலம் தெலுங்கிலும் தடம் பதிக்கிறார் சல்மான்கான்.