பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பிரபாஸுடன் பான் இந்தியா படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ஹிந்தியில் கெஹ் ரையான் என்ற படத்தில் நடித்துள்ளார். ஷகுன் பத்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, சித்தார்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் நாளை(பிப்., 11) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்பட டீசரில் சித்தார்த் சதுர்வேதியுடன் தீபிகா படுகோனே நடித்த லிப் லாக் உள்ளிட்ட நெருக்கமான காட்சிகள் வெளியானது. இதை பலர் ட்ரோல் செய்தனர்.
இந்த நிலையில் தீபிகா படுகோனே மீடியாக்களை சந்தித்தபோது, இப்படி நடிப்பதற்கு உங்கள் கணவர் இடத்தில் அனுமதி பெற்று விட்டீர்களா? என்று கேட்டனர். அதற்கு, ‛‛இது மாதிரியான முட்டாள்தனமான ட்ரோல்களை நான் கண்டுகொள்வதில்லை. ரன்வீரும் இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார். எனது நடிப்பை அவர் விரும்புவார். இந்தப்படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்து ரன்வீர் சிங் பெருமைப்படுவார்'' என்றார் தீபிகா.