மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

நடிகை பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் விராட பர்வம் மற்றும் ஹிந்தியில் மைதான் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. இதில் ஹிந்தியில் இவர் நடிக்கும் மைதான் படம் கால்பந்து விளையாட்டு பின்னணியில் அறுபதுகளில் நிகழும் கதை. பிரபல கால்பந்து கோச் சையது அப்துல் ரஹீம் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோச் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும், அவரது மனைவியாக பிரியாமணியும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் அஜய் தேவ்கன் கதாபாத்திரம் பற்றி பிரியாமணி கூறும்போது, “படத்தில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளேன்.. கதைப்படி அஜய் தேவ்கன் ஆங்கிலத்தை ரொம்பவே நேசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த அளவுக்கு என்றால், கடைக்கு ஷாப்பிங் போகும்போது அம்மாவுக்கும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் கிப்ட் பொருட்கள் வாங்கினாலும் மனைவியான எனக்கு ஆங்கில டிக்சனரியை வாங்கி தருவார்.. எதற்காக என நான் கேட்டதற்கு, பிழையில்லாமல் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக என பதில் கூறுவார். அந்த அளவுக்கு அவர் ஆங்கிலத்தை நேசிப்பவராக நடித்துள்ளார்” என கூறுகிறார் பிரியாமணி.




