இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
நடிகை சன்னி லியோன் நடனமாடி கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபான் மெயின் ராதிகா என்ற ஆல்பம் வெளியானது. இதில் சன்னி லியோன் நடனமாடிய மதுபான் என்ற பாட்டுக்கு அவர் மிகவும் கவர்ச்சிகரமான உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். இந்த ஆல்பம் வெளியிடப்பட்டதிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த இந்து மத சாமியார்கள் சன்னி லியோனின் இந்த ஆல்பம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாகவும் அருவருக்கத்தக்க ஆட்டத்தை சாதியின் பெயரால் அரங்கேற்றி இருப்பதாகவும் கூறி இருப்பதோடு உடனடியாக இந்த பாடலை நீக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதையடுத்து மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ராவும் சன்னி லியோனின் பாடலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்படி ஒரு பாடலை ஆடியதற்காக சன்னிலியோன் உள்பட அந்த ஆல்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். முக்கியமாக மூன்று நாட்களுக்குள் அந்த ஆல்பத்தில் இருந்து சன்னி லியோனின் அந்த பாடலை நீக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார் . அப்படி இல்லை என்றால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
அவரது இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மதுபான் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை அடுத்த மூன்று நாட்களுக்குள் மாற்றுவதாக அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், மதுபான் பாடல் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாகவும் இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த பாட்டின் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை மாற்றி அமைக்க இருக்கிறோம். பழைய பாட்டுக்கு பதிலாக புதிய பாடல் அமைத்து மூன்று நாட்களில் வெளியிட இருக்கிறோம் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.