ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்க கடந்த வாரம் வெளிவந்த படம் '83'. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வென்று சாதனை படைத்தது. அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் '83'.
நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப்படம் வசூலில் எதிர்பாராத ஏமாற்றத்தைத் தந்து வருகிறது. வட இந்தியாவில் சில இடங்களில் மக்கள் வராத காரணத்தால் காட்சிகளை ரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியான 'புஷ்பா' படத்தின் வசூலைக் கூட '83' பெற முடியாமல் திணறுவதாக பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் மட்டும் இந்தப் படம் 44 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாம்.
100 கோடி வசூலையாவது தாண்டுமா என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள். படத்தில் சுவாரசியமான காட்சிகளை வைக்காமல் வெறும் கிரிக்கெட் போட்டிகளை மட்டுமே வைத்து ஒரு டாக்குமென்டரி போல எடுத்ததுதான் தவறு என ரசிகர்கள் கூறுகிறார்களாம். அதுவே படத்திற்கு எதிர்மறையாகவும் அமைந்துவிட்டது என்பதுதான் பாலிவுட்டின் கருத்தாக உள்ளது.