ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
புற்றுநோய் சிகிச்சை முடிந்து நடிகை மனிஷா கொய்ராலா வீடு திரும்பினார். இருந்தும் சில மாதங்கள் அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருந்து ஓய்வு எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மனிஷா கொய்ரலாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் மனிஷா. நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மனிஷா கொய்ராலா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு ஆபரேஷன் நடந்தது. சிகிச்சைக்கு பிறகு மனிஷாகொய்ரலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இனி ஆபத்தில்லை என்பது உறுதியானதும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் இன்னும் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.