''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் வழங்கப்படும் 94வது அகாடமி விருதுகளுக்கான போட்டிக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் படமாக தமிழில் வெளியான கூழாங்கல் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நயன்தாரா , விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளனர்.
சர்தார் உதம், மண்டேலா, ஷெர்னி உள்பட 14 படங்கள் போட்டியிட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூழாங்கல் தேர்வானது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேர்வு குழு சார்பில் அதன் உறுப்பினர் இந்திரதீப் தாஸ்குப்தா கூறியதாவது: சர்தார் உதம் திரைப்படம் நல்ல படம்தான். ஆனால் இப்படம் அதிகம் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை சித்தரிக்கிறது, மேலும் இப்படம் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தைப் பற்றி இயல்புக்கு மாறாக நீளமாக சித்திரிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இதுவரை வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு போராளியைப் பற்றி பெரும் பொருட்செலவில் படம் எடுப்பது நேர்மையான முயற்சி என்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் திரைப்பட உருவாக்கத்தில், அது மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை வெளிப்படுத்துவதாகத்தான் இது இருக்கிறது. உலகமயமாக்கலின் இந்த காலகட்டத்தில், இந்த வெறுப்பை இன்னமும் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. மற்றபடி படத்தின் தயாரிப்பு சர்வதேச தரத்தில் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. என்றார்.