என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிய அளவில் குறைந்து விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில பிரபலங்கள் அவ்வப்போது கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துகொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, தான் கடந்த மாதம் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்ததாக தற்போது கூறியுள்ளார்.
கடந்த மாதம் டைகர்-3 படப்பிடிப்பிற்காக ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவுக்கு சென்றிருந்தபோது அங்கே கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகி, நான்கு நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டேன் என்று கூறியுள்ளார் இம்ரான் ஹாஸ்மி. இந்தியாவிலிருந்து விமானம் ஏறும் முன்போ, அல்லது விமானத்தில் பயணித்த சமயத்திலோ தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி ஒரு மாதம் கழித்து அவர் இதை கூறுவதற்கு காரணம் இருக்கிறது. அவர் தற்போது நடித்துள்ள டைபக் என்கிற ஹாரர் படம் வரும் அக்-29ல் வெளியாக இருக்கிறது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இம்ரான் ஹாஸ்மி, தனக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டதையும் ஒரு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி வருகிறார் என்றே பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.