தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
இருந்தாலும் இளையதளபதி விஜய்யின் அப்பாவுக்கு ரொம்பவும் தான் ஆசை! இல்லையா பின்னே... அ.தி.மு.க.,வில் ஜெ-வை எல்லோரும் அம்மான்னு கூப்பிடுற மாதிரி, விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் எல்லோரும் தன்னை அப்பான்னு தான் கூப்பிடணும் என்று சமீபத்தில் நடந்த மன்ற கூட்டமொன்றில் வாய்மொழியாக உத்தரவு போட்டாராம் அப்பா எஸ்.ஏ.சி! இதைக்கேட்டதும் அதிர்ச்சியில் வாயடைத்துபோன ரசிகர்களில் ஒருவர் மட்டும் உஷாராகி, அம்மான்னு கூப்பிட்டா அது தாயுள்ளத்தை குறிக்கும், அதே தந்தை இல்லாத ஒருத்தரை அப்பான்னு கூப்பிட்டா அதுவேற பல அர்த்தங்களை கூறும்... என்று எடுத்துக்கூறியிருக்கிறார். இதை எப்படி புரிந்து கொண்டாரோ எஸ்.ஏ.சி., நான் பேசிகிட்டிருக்கப்பவே எதிர்த்து பேசுறீயா...? என் மன்றத்துக்குள்ள உனக்கென்ன வேலைன்னு கேட்டு அந்த ரசிகர் மன்ற உறுப்பினரை அடிக்காத குறையாக அந்த கூட்டத்தில் இருந்து வெளியேற்றியதுடன் இல்லாமல் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தும் அனுப்பிவிட்டார்களாம்!
சமீபத்தில் சென்னை வடபழனி ஷோபா கல்யாண மண்டபத்தில் நடந்த அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறிய அந்த உறுப்பினர், தென் சென்னை மாவட்டத்து விஜய் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதால், அங்கிருந்து விலக்கப்பட்ட கையோடு தனக்கு ஆதரவான மேலும் சில விஜய் மன்ற உறுப்பினர்களோடு வேறு நடிகரின் ரசிகர்மன்றம் தேடி வருகிறாராம்!
இப்போது சொல்லுங்கள், விஜய் அப்பாவின் அப்பா ஆசை... சற்றே விபரீத ஆசை தானே...?!