2008ம் ஆண்டின் தமிழ் திரைப்பட கண்ணோட்டம்
02 ஜன, 2009 - 12:00 IST
தமிழ் சினிமா 2008 - சிறப்பு கண்ணோட்டம்
தமிழ் சினிமா உலகத்தை பொறுத்தவரை 2008ம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவே இருந்திருக்கிறது. 2007ம் ஆண்டில் வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை 137. இது 2008ம் ஆண்டில் 180 ஆக அதிகரித்திருந்தது. இதில் நேரடி படங்களின் எண்ணிக்கை 2007ல் 107. இது 2008ல் 119ஆக உயர்ந்துள்ளது. இதேபோல 2007ல் 30 மொழிமாற்ற படங்கள் மட்டுமே ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. ஆனால் 2008ல் 61 மொழிமாற்ற படங்கள் வந்துள்ளன.
அதிக படங்கள் நடித்தவர்கள் பட்டியலில் நடிகர் நாசர் முதலிடத்தை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நகைச்சுவை நடிகர் இடம்பிடித்துள்ளார். 2008ம் ஆண்டில் வடிவேலு நடித்த படங்களின் எண்ணிக்கை 10. ஹீரோ,ஹீரோயினை பொறுத்தவரை நடிகர் பரத்தும், நடிகை நயன்தாராவும் தலா 4 படங்கள் நடித்துள்ளனர். பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 30 படங்களுக்கு பாடல் எழுதி முதலிடத்தை பிடித்துள்ளார்.
2008ம் ஆண்டில் கலைத்துறையே சேர்ந்த யுக்தா முகி, முன்னா -அனு, கனிகா, கோபிகா, விந்தியா, ஷ்ரேயா ரெட்டி, சிபிராஜ், பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குனர்கள் மதுமிதா, புவனராஜா, கிருஷ்ணா, திருமலை, இசையமைப்பாளர்கள் மஹதி, டி.இமான் ஆகியோர் இல்லற வாழ்க்கையில் புகுந்துள்ளனர்.
2008ல் வெளியான படங்கள்
- அஞ்சாதே
- அசோகா
- அபியும் நானும்
- அய்யா வழி
- அரசாங்கம்
- அலிபாபா
- அழகு நிலையம்
- அழைப்பிதழ்
- அறை எண் 305ல் கடவுள்
- ஆடும் கூத்து
- ஆயுதம் செய்வோம்
- இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
- இயக்கம்
- இன்பா
- இனி வரும் காலம்
- உத்தரவின்றி உள்ளே வா
- உருகுதே
- உளியின் ஓசை
- உனக்காக
- உன்னை நான்
- எல்லாம் அவன் செயல்
- எழுதிய தாரடி
- ஏகன்
- ஃஅக்கு
- கட்டுவிரியன்
- கண்ணும் கண்ணும்
- கத்திக்கப்பல்
- காசிமேடு கோவிந்தன்
- காதல் என்றால் என்ன
- காதல் கடிதம்
- காதல் வானிலே
- காத்தவராயன்
- காலைப்பனி
- காளை
- கி.மு.,
- குசேலன்
- குருவி
- கொடைக்கானல்
- சக்கரகட்டி
- சக்ரவியூகம்
- சண்டை
- சத்யம்
- சந்தோஷ் சுப்ரமணியம்
- சரோஜா
- சாதுமிரண்டா
- சாமிடா
- சிங்கக்குட்டி
- சில நேரங்களில்
- சிலம்பாட்டம்
- சுட்டபழம்
- சுப்ரமணியபுரம்
- சூர்யா
- சேவல்
- தங்கம்
- தசாவதாரம்
- தரகு
- தனம்
- தாம்துõம்
- தித்திக்கும் இளமை
- திருதிருடா
- திருவண்ணாமலை
- தீக்குச்சி
- தீயவன்
- துரை
- துõண்டில்
- தொடக்கம்
- தோட்டா
- தோழா
- நடிகை
- நாயகன்
- நெஞ்சத்தை கிள்ளாதே
- நேபாளி
- நேற்று இன்று நாளை
- பஞ்சாமிர்தம்
- பச்சை நிறமே
- பத்து பத்து
- பந்தயம்
- பழனி
- பட்டைய கிளப்பு
- பாண்டி
- பிடிச்சிருக்கு
- பிரிவோம் சந்திப்போம்
- பீமா
- புதுசு கண்ணா புதுசு
- புதுப்பாண்டி
- பூ
- பூச்சி
- பொம்மலாட்டம்
- பொய் சொல்ல போறோம்
- பொன் மகள் வந்தாள்
- மகேஷ் சரண்யா மற்றும் பலர்
- மதுரை பொண்ணு சென்னை பையன்
- மலரினும் மெல்லிய
- மாணவ மாணவிகள்
- மாணவன் நினைத்தால்
- முதல் முதல் முதல் வரை
- முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
- மோகம்
- யாரடி நீ மோகினி
- ரகசிய சினேகிதனே
- ராமன் தேடிய சீதை
- வசூல்
- வம்புச்சண்டை
- வல்லமை தாராயோ
- வழக்கறிஞர் அர்ச்சனா
- வள்ளுவன் வாசுகி
- வாரணம் ஆயிரம்
- வாழ்த்துகள்
- வாழ்வெல்லாம் வசந்தம்
- விளையாட்டு
- வெள்ளித்திரை
- வேதா
- வேள்வி
- வைத்தீஸ்வரன்
- ஜெயங்கொண்டான்
விழா கொண்டாடிய படங்கள்
388 நாட்கள் : பருத்தி வீரன்
200 நாட்கள் : யாரடி நீ மோகினி
150 நாட்கள் : குருவி
100 நாட்கள் : முதல் முதலாய், மலைக் கோட்டை, பொல்லாதவன், வேல், சந்தோஷ் சுப்ரமணியன், அஞ்சாதே, ஒன்பது ரூபாய் நோட்டு, பிரிவோம் சந்திப்போம், பாண்டி, வல்லமை தாராயோ, தசாவதாரம், சுப்ரமணியபுரம், தாம்துõம், பொய் சொல்ல போறோம், காளை, பழனி, அழகிய தமிழ் மகன், யாரடி நீ மோகினி, சண்டை, தோட்டா, பில்லா, மிருகம், சிலந்தி, காத்தவராயன், சரோஜா, உளியின் ஓசை, நாயகன், ஜெயம் கொண்டான்.
பாடல் இல்லாத படம்: அசோகா, ஃஅக்கு
பத்திரிகையாளர் இயக்கிய படம்: ஆதி (சிலந்தி)
நீளமான படம்: அஞ்சாதே (5214 மீட்டர்)
நீளம் குறைவான படம்: ஃஅக்கு (2310 மீட்டர்)
திரையில் பெண்கள்
இயக்குனர் : மதுமிதா
பாடல் ஆசிரியர்: வாசுகோகிலா, பிரேமா.
கதை: வினோலியா.
இசை: ஸ்ரீலேகா.
டப்பிங் படங்கள்
இந்த ஆண்டு 61 படங்கள் இந்திய மொழிகளிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. (எந்த ஆண்டிலும் இல்லாத ஓர் சாதனை) இவற்றைத் தவிர வருடந்தோறும் 100 படங்களுக்கு மேலான அயல்நாட்டு படங்கள் தமிழில் டப் செய்யப் படுகின்றன. அவையனைத்தும் மும்பையில் தணிக்கை செய்யப்படுகிறது. அவை அரசு கணக்கில் சேர்க்கப் படுவதில்லை.
நாவல் படமானவை
* வெய்யிலோடு போய் (பூ), சாரப்பாளையம் சாமுண்டி (உளியின் ஓசை)
புத்தகம் வெளியீடு
* கௌரி ராம் நாராயணன் "எம்.எஸ். மற்றும் ராதா இணை பிரியாத பக்தி சகாப்தம்' சுஸ் வரலட்சுமி அறக்கட்டளை
* "நெஞ்சில் நிலைத்து நின்று நினைவை விட்டு அகலாத கவிஞர்களின் திரை இசைப்பாடல்கள்' (பிலிம் நியூஸ் ஆனந்தன்)
* ரஜினிகாந்த் பேரக் கேட்டாலே' (டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த், பல் மருத்துவர்)
* "கே.பி.சுந்தராம்பாள் நுõல்' (இரண்டாம் பதிப்பு) பாஸ்கரதாசன்
* தியோடர் பாஸ்கரன் "சிவாஜி சரித்திரம்' அருணா வாசுதேவ் வெளியீடு
* இளையராஜாவின் நுõல்கள் "இசைஞானி இளையராஜா' அடியார் அடியொற்றி, நுõல்கள் வெளியீடு
* "நிழலோவியம்' நாஞ்சில் பி.சி.அழகப்பன் (இயக்குனர்)
* டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா வாழ்க்கை வரலாறு நுõல் "சங்கீத பெருங்கடல்' கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. ஆசிரியர் ராணி மைந்தன்
* "கல்கி வளர்த்த கலைகள்' கல்கி எழுதிய விமர்சனங்கள் நுõலாக வெளியிடப்பட்டது.
* நல்லி குப்புசாமி செட்டி "தியாகராயநகர் அன்றும் இன்றும்'
* வலம்புரி சோமனாதன் "புத்தமகா காவியம்'
குடியரசு தின விருது
* பத்மஸ்ரீ : பி.சுசீலா மாதுரி தீட்ஷித்
உலகப்பட விழா
* "காஞ்சிவரம்' டொரெண்டோ பட விழாவில் பங்கு கொண்டது.
* கோவாவில் நடைபெற்ற உலக படவிழாவில் காஞ்சிவரம் படம் திரையிடப்பட்டது.
* கேன்ஸ் உலகப் பட விழாவில் பில்லா திரையிடப் பட்டது.
* இன்கோ சென்டர் பெண் இயக்குனர்கள் பட விழா சாரதா ராமனாதன், ஜானகி வெங்கட்ராமன், ரேவதி, சுஹாசினி ஆகியோரின் படங்கள் திரையிடப்பட்டன.
* பெர்லின் படவிழாவில் பருத்திவீரன் படத்தை இயக்கிய அமீருக்கு சிறந்த இயக்குனர் விருது.
* 2008ல் உலகப் பட விழாவில் இந்திய பனோரமாவில் திரையிடப்பட்ட படங்கள்
* காஞ்சிவரம், கல்லுõரி, பில்லா, முதல் முடிய முதல் வரை
மூலக்கதை என்ன?
* அடாவடி (அ) கன்னடம்
* கலக்கற சந்ரு (ஒன்மேன் ஷோ) மலையாளம்
* கிரீடம் (கிரீடம்) மலையாளம்
* சீனா தானா (இஐஈமூசா) மலையாளம்
* தவம் (இட்லு ஸ்ராவணி சுப்ரமணியம்) தெலுங்கு
* திருரங்கா (ஜீலாயி) தெலுங்கு
* நம்நாடு (லயன்) மலையாளம்
* நினைத்தாலே (ஆனந்) தெலுங்கு
* பரட்டை என்கிற அழகுசுந்தரம் (யோகி) கன்னடம்
* போக்கிரி (போக்கிரி) தெலுங்கு
* வீராப்பு (ஸ்படிகம்) மலையாளம்
தெலுங்கில் வந்த தமிழ் கதைகள்
* புன்னகை தேசம் (நவ வசந்தம்),
* எதிரி (ஸ்டேட் ரௌடி),
* திருவிளையாடல் ஆரம்பம் (தக்கரி)
* சித்திரம் பேசுதடி (ராஜு பாய்)
* சிவகாசி (விஜயதசமி)
புதிய திரை அரங்குகள்
* சென்னையில் சிட்டி சென்டர் எனும் இடத்தில் ஐனாக்ஸ் என்ற பெயரில் 4 திரை அரங்குகள் துவங்கப்பட்டன. கட்டணம் ரூ.120ம், ரூ.10ம். ஒரு காட்சி வசூல், ரூ.30,000 மேலாளர் வினோத் பாபு
* சாய் சாந்தி, சுவர்ணசக்தி அபிராமி புதிய திரை அரங்கம் துவக்கப்பட்டது.
* ராஜ், ஜெயபிரதா, வாணி, வசந்தி, நேஷனல் ஐந்து அரங்கங்கள் மூடப்பட்டன.
தற்போது சென்னையில் 84 அரங்குகள் உள்ளன.
மறைந்த கலைஞர்கள்
நட்சத்திரங்கள் : ராணி சோமனாதன், எம்.என்.நம்பியார், பாண்டியன், ஷோபன்பாபு, டி.பி.முத்துலட்சுமி, கோபி, தேனீ குஞ்சராம்பாள், ஜெயகௌரி, குணால், ஜான் அமிர்த ராஜ், ரகுவரன், விக்ரமா தித்யா.
இயக்குனர்கள் : ஸ்ரீதர், அவினாசி மணி, கோகுலகிருஷ்ணா, சேஷகிரி ராவ்.
தயாரிப்பாளர்கள்: லங்கால் முருகேஷ், டி.வி.எஸ். சாஸ்திரி, எம்.ஏ.பிரகாஷ், டாக்டர்.பரிமளம்.
அரங்கு: கே.ராஜகோபால் ரெட்டி (தேவி), பி.என்.நாராயணசாமி (உட்லண்ட்ஸ்).
பத்திரிகையாளர்: விஜயன்.
கதாசிரியர்கள்: சுஜாதா, ஆர்.என்.ஜெயகோபால்.
ஒளிப்பதிவாளர்: ஓய்.ஆர்.சுவாமி.
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்.
சிறப்புச் செய்திகள்
* முதல்வர் கருணாநிதி உளியின் ஓசை படத்திற்கு கதை வசனம் எழுதியதற்கு தனக்குக் கிடைத்த ஊதிய தொகையை திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் இருக்கும் நலிந்த கலைஞர்கள் 89 பேரை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வழங்கினார். இந்நிகழ்ச்சி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் சார்பாக நடைபெற்றது.
* பிரமிட் சாய்மீரா நிதி நிறுவனம் ஒரே சமயத்தில் 10 தயாரிப்பாளர்களுக்கும் நிதி உதவி வழங்கினர்.
* டி.எம்.சௌந்தரராஜனுக்கு மதுரையில் பாராட்டு விழா.
* பாபு கணேஷ் ஒரு படத்தின் 14 தொழிலில் ஈடுபட்டிருந்தார் "நடிகை' படத்தின் மூலம்.
* இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி விஜய் ஆண்டோனி மியூசிக் என்ற பெயரில் இசைத் தட்டு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
* ஆடும் கூத்து 2005ல் தணிக்கையானது 2008ல் தொலைக் காட்சியில் வெளியானது. கிருபா பிலிம்ஸ் பெயரில் தணிக்கை செய்யப்பட்டு பிறகு லைட் அண்டு ஷேடோ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளரானார். இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டது தேசிய விருது.
* வழக்கில் சிக்கிய படங்கள் தீயவன் தசாவதாரம் வள்ளுவன் வாசுகி வாரணம் ஆயிரம்
* ரகசிய சினேகிதனே அழகிய ஆபத்து என்ற பெயரில் 2005ல் தணிக்கை செய்யப்பட்ட படம்
* "அட்வகேட் அர்ச்சனா' வழக்கறிஞர் அர்ச்சனா பெயரில் வெளியானது.
* ஏ.ஆர்.ரகுமான் இசைப் பள்ளி துவக்கினார்.
* ஐசரிவேலன் பல்கலைக் கழகம் துவக்கினார்.
* நடிகர் ராஜேஷ் உணவு விடுதி துவக்கினார்.
* நடிகர் மோகன் 100 படங்கள் நடித்து முடித்தார்.
* Mணூ.பாண்டி பெயரில் தணிக்கையான படம் புதுப் பாண்டி பெயரில் வெளியானது.
* நெருப்பூ படம் 1991ல் தணிக்கையானது. "டிவி'யில் வெளியிடப் பட்டது. 2008ல் காசிமேடு கோவிந்தன் பெயரில் வெளியானது.
* மாணவ, மாணவிகள் மும்பையில் தணிக்கை செய்யப் பட்டது.
- தினமலர் சினி டீம் -