100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
கிரிக்கெட் கேப்டன் தோணியுடன் காதல், ஆர்யாவுடன் டேட்டிங், புதுமுக நடிகருடன் காதல் என்றெல்லாம் லட்சுமி ராயைப் பற்றி தினம் தினம் புதிது புதிதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் உடற்பயிற்சி நிபுணர் பிரசாத்தும், லட்சுமிராயும் காதலிப்பதாக கோடம்பாக்கத்தில் செய்தி கசிந்துள்ளது. இதுபற்றி லட்சுமிராய் அளித்த பேட்டி :
தோணி, ஆர்யாவுடன் காதல், கல்யாணம் என செய்தி வெளிவந்தபோதெல்லாம் நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனென்றால், இந்த செய்திகள் எந்த அளவும் அவர்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போது எனது உடற்பயிற்சி நிபுணருடன் சேர்த்து செய்தி வந்திருக்கிறது. ஒரு மேக்கப் மேனோ, டச்சப் பாயோ, ஹேர் டிரஸ்ஸரோ எப்படி என்னுடன் பண்புரிகிறார்களோ... அப்படித்தான் பிரசாத்தும்! பாவம், சமீபத்தில்தான் பெண் பார்த்து அவருக்கு நிச்சயதார்த்தம் செய்யும் அளவுக்கு வந்திருக்கிறது. இந்தச் செய்தி அவரது குடும்பத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும் என்பதுதான் உண்மை. கிசுகிசுக்களை ஒருபோதும் நான் சட்டை செய்ததில்லை. அதை எழுதியவர்களிடம் கூட நான் அன்பாகத்தான் பழகி வந்தி்ருக்கிறேன். காரணம் அது எனது வாழ்க்கையின் ஒரு பகுதி... வரத்தான் செய்யும் என்ற புரிதல் எனக்குள்ளது.
ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி என்னை பாதிக்காவிட்டாலும், ஒரு சாதாரண நபரான பிரசாத்தின் திருமண, குடும்ப வாழ்க்கையையே பாதிக்கும். அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு இந்திப்படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அதற்காக ஒன்பது கிலோ எடையை நான் குறைத்தாக வேண்டும். தமிழில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், நான் அவனில்லை பாகம் 2, மலையாளத்தில் மம்முட்டியுடன் 2 படங்கள், மோகன்லாலுடன் 1 படம் ஒப்பந்தமாகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதனால், உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று பயிற்சி செய்யும் அளவு நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறேன். இதற்காகத்தான் எனது உடற்பயிற்சி நிபுணரை கூடவே அழைத்துச் சென்றேன் என்பது மட்டுமே உண்மை.
பயிற்சியாளர் பக்கத்து அறையில் இருந்தால், அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட முடியும். இந்த இரண்டு மணி நேரம் கட்டாயம் நான் உடற்பயிற்சி செய்தாக வேண்டும். அப்போதுதான், அடுத்த சில நிமிடங்களில் நான் மேக்கப் போட்டு ஷூட்டிங்குக்கு தயாராக முடியும். வேறொரு ஒட்டலில் இந்த பயிற்சியாளர் தங்கியிருந்தால் அவர் வந்து சேர அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஆகும். அந்த கால விரயத்தைத் தவிர்க்கவே நான் தங்கியிருந்த ஒட்டலில் தங்க வைத்தேன். மற்றபடி பக்கத்து அறையிலேயே ரூம் போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எனது மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர் போன்றோரும் கூட அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர்.
உடன் பணியாற்றுபவர்களுடன் காதல் என்று எழுத ஆரம்பித்தால் இனி உதவியாளர்கள் என்று யாரையுமே வைத்துக் கொள்ள முடியாத நிலைதான் ஏற்படும். அதனால், இது முழுக்க முழுக்க பொய் செய்தி மட்டுமே. எந்த உண்மையுமில்லை.