என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
2024ம் ஆண்டின் ஐந்து மாதங்கள் கடந்துவிட்டது. இந்த ஐந்து மாதங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐயும் தாண்டிவிட்டது. ஆனாலும், 100 கோடி வசூல் படங்கள் ஒன்று கூட இல்லையே என்று வருத்தப்பட்ட திரையுலகினருக்கு கடந்த மே மாதத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' படம் 100 கோடி வசூல் படமாக அமைந்து அந்த ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது.
இருந்தாலும் அந்த ஒரு படம் தவிர கடந்த மாதம் வெளியான மற்ற 21 படங்களும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய வெற்றியைத் தரவில்லை என்பது வருத்தமே. சுமாரான வெற்றி என்ற அளவில் மட்டும் ஓரிரு படங்கள் அமைந்தன. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் வரை இந்த வருத்தம் தீர வாய்ப்பில்லை. அடுத்த ஆறு மாதங்களில் அப்படியான படங்கள் அடிக்கடி வர இருப்பதால் இன்னும் சில 100 கோடி வசூல் படங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மே மாதம் 3ம் தேதி “அக்கரன், அரண்மனை 4, குரங்கு பெடல், நின்னு விளையாடு'' ஆகிய படங்கள் வெளிவந்தன. சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி, யோகிபாபு, கோவை சரளா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அரண்மனை 4' படம் ஆச்சரியப்படும் அளவில் பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாக பெரிய பாராட்டுக்கள் இந்தப் படத்திற்குக் கிடைக்கவில்லை. என்றாலும், கோடை விடுமுறையில் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று இருந்த குடும்பத்து ரசிகர்களுக்கு இப்படம் சிறந்த என்டர்டெயின்மென்ட்டாக அமைந்தது. அதற்குக் காரணம், படத்தில் அமைந்த சிறப்பான கிராபிக்ஸ் காட்சிகள். அதனால்தான் படம் 100 கோடி வசூலைக் கடந்து பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'குரங்கு பெடல்' நல்ல படமாக அமைந்தது. சில நல்ல படங்களை நமது ரசிகர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அப்படியான ஒரு படம்தான் இது.
மே 10ம் தேதி “மாயவன் வேட்டை, ரசவாதி, ஸ்டார், உயிர் தமிழுக்கு” ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் கவின் நடித்து வெளிந்த 'ஸ்டார்' படத்திற்கு சுமாரான வரவேற்பும், சுமாரான வசூலும் கிடைத்தது. மற்ற படங்கள் ரசிகர்களைக் கவரவில்லை, ஏமாற்றத்தையே தந்தன.
மே 17ம் தேதி “எலக்சன், இங்க நான்தான் கிங்கு, கன்னி, படிக்காத பக்கங்கள்” ஆகிய படங்கள் வெளிவந்தன. சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'இங்க நான்தான் கிங்கு' எந்த வித ஈர்ப்பையும் கொடுக்காமல் காணாமல் போனது. ஒரு படத்தில் வெற்றி பெற்றால் அடுத்த படத்தில் தோல்வியைத் தழுவுகிறார் சந்தானம். நகைச்சுவையான கதைகளைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.
மே 23ம் தேதி ராமராஜன் நாயகனாக நடித்த 'சாமானியன்' படம் வெளிவந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படம். உடல்நிலை காரணமாக அவரது தோற்றமும், நடிப்பும் எடுபடாமல் போனது.
மே 24ம் தேதி “கொஞ்சம் பேசினால் என்ன, பகலறியான், பி.டி சார்”, ஆகிய படங்கள் வெளிவந்தன. ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடித்த 'பிடி.சார்' படத்திற்கு விமர்சனங்கள் சிறப்பாக இல்லை. ஆனாலும், படம் ஓடி வெற்றி பெற்றதாக படக்குழுவினர் சக்சஸ் மீட் எல்லாம் நடத்தினார்கள்.
மே 31ம் தேதி 'புஜ்ஜி, கருடன், ஹிட் லிஸ்ட், குற்றப் பின்னணி, அக்காலி” ஆகிய படங்கள் வெளிவந்தன. சூரி கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த 'கருடன்' படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த ரசிகர்களும் படம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அதனால், படத்தின் வசூலும் 25 கோடியைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. கதையின் நாயகனாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் சூரி. 'ஹிட் லிஸ்ட்' படத்தில் இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமானார். அவருடைய அறிமுகத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும், படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
மே மாதத்தின் முதலில் வந்த 'அரண்மனை 4' 100 கோடி வசூல் படமாகவும், கடைசியில் வந்த 'கருடன்' குறிப்பிடும்படியான வெற்றிப் படமாகவும் அமைந்தது. மே மாதத்தில் வெளியான 22 படங்களில் 2 படங்கள்தான் வியாபார ரீதியாக லாபத்தைக் கொடுக்கும் படங்களாக அமைந்தன.
மே 2024 வெளியான படங்களின் விவரம்…
மே 3 : அக்கரன், அரண்மனை 4, குரங்கு பெடல், நின்னு விளையாடு
மே 10 : மாயவன் வேட்டை, ரசவாதி, ஸ்டார், உயிர் தமிழுக்கு
மே 17 : எலக்சன், இங்க நான்தான் கிங்கு, கன்னி, படிக்காத பக்கங்கள்
மே 23 : சாமானியன்
மே 24 : கொஞ்சம் பேசினால் என்ன, பகலறியான், பி.டி சார்
மே 31 : புஜ்ஜி, கருடன், ஹிட் லிஸ்ட், குற்றப் பின்னணி, அக்காலி