மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
ஐந்து மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 50 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் அஜய்ரத்தினம். கம்பீர தோற்றமுடைய இவர் நடித்த கதாபாத்திரங்களில், நூற்றுக்கும் மேற்பட்டவை போலீஸ் அதிகாரி வேடங்கள். இப்போது, 8 திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஜய்ரத்தினத்தை இப்படி அறிமுகம் செய்தால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவருக்கு இன்னொரு "முகம் உண்டு. அது ஞாபகத்திறன் பயிற்சியாளர்; தன்னம்பிக்கை பேச்சாளர். ஆறு ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் மாணவர்களை சந்தித்து பயிற்சி அளித்து வருகிறார். "அவர்களது தனித்திறனை வளர்த்து, கல்லையும் செதுக்கி வைரமாக்குவேன் என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
மதுரை வந்த இவரோடு பேசியதில் இருந்து...
* "ஆக்டர் அஜய்ரத்தினம்..."டிரைனர் அஜய்ரத்தினம் ஆனது எப்படி?
ஒவ்வொரு வீட்டிலும், ஒரு விளையாட்டு பிள்ளை உண்டு. எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அதிகம் விளையாடுவார்; கொஞ்சம் படிப்பார். இன்னொருவர் நன்றாக படிப்பார். எனவே, எனது மகனின் படிப்பு, ஞாபகத்திறனை மேம்படுத்த, அவன் படித்த சென்னை பள்ளியின் "மெமரி டிரைனர்(ஞாபகத்திறன் பயிற்சியாளர்) மகாதேவனை சந்தித்தேன். எப்படி படிப்பது என்று, எளிய முறையில் பயிற்சி அளித்தார். நானும் கூடவே இருந்தேன். பயிற்சி பெற்ற எனது மகனும் படிப்பில் சாதித்தான். அப்போது, நாமும் இதுபோன்று பயிற்சி பெற்று, பிற மாணவர்களுக்கு ஏன் வழிகாட்டக்கூடாது என்று நினைத்தேன். அதன் விளைவு, நானும் "டிரைனர் ஆனேன். ஆறு ஆண்டுகளாக, "ஸ்டோன் டூ டைமண்ட்(கல்லில் இருந்து வைரம்) என்ற தலைப்பில் பயிற்சி தந்து வருகிறேன்.
* வெளிநாடுகளில் உள்ளது போன்று, நம் நாட்டில் அவ்வளவாக "கவுன்சிலிங் பிரபலமாகவில்லையே?
"மோரல் சயின்ஸ் வகுப்புகள் (நீதிபோதனை) இப்போது நம் பள்ளிகளில் இல்லை. குழந்தைகள், பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கும் வழக்கம் வழக்கொழிந்து விட்டது. அன்பு, பாசம், பண்பாடு, கலாச்சாரத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டி உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் உள்ளது போன்று, எல்லா பள்ளிகளிலும் "கவுன்சிலர்கள் தேவை தான். மாணவர்களின் தனித்திறன் நுட்பத்தை வெளிக்கொண்டு வர, "டிரைனர்கள் தேவை.
* கேமரா முன்பு நடிப்பது, மேடையில் பேசுவது- எது உங்களுக்கு பிடித்திருக்கிறது?
இரண்டும் இரு கண்கள். கடைசி மூச்சு வரை நடிப்பேன். போதும் என்று நினைத்தால், எதுவும் நடக்காது. திரைப்படத்தில், கதாபாத்திரங்கள் பிடித்துப்போனால் மக்கள் பாராட்டுகிறார்கள். மேடையில் பேசும் போது, உடனுக்குடன் கை தட்டல் கிடைக்கிறது. "எப்படி வெற்றியாளர் ஆவது என்று நம்பிக்கையூட்டி, வாழ்க்கையில் ஜெயிக்கும் வழி சொல்வதற்கு ஈடு ஏதும் இல்லை. பல மனிதர்களை சந்திக்கும் போது வாழ்க்கையின் அர்த்தம், அனுபவம் கிடைக்கிறது. இந்த மாற்றம் எதிர்பார்க்காதது. திறமை இருந்தால் எங்கும் ஜெயிக்கலாம்.
* மேடைப் பேச்சில் நிறைய குட்டிக்கதைகள் கூறுகிறீர்கள்? எங்கே கற்றீர்கள்?
ஆம்...நான் ஒரு நவீன கதை சொல்லி! குட்டிக்கதைகள் சொல்லி, குழந்தைகளோடு பேசுவது எனது "ஸ்டைல். எனக்கு நிறைய குருக்கள் உண்டு; அம்மா ஆசிரியை. நிறைய கதைகள் சொல்லித்தருவார். பேசுவதற்காகவே, நிறைய புத்தகங்கள் படிப்பேன்.
* நீங்கள் நடிகர் ஆனது எப்படி?
கல்லூரி முடித்து வெளியே வந்த நேரம். உயரமான கேரக்டருக்கு ஆள்தேடிக்கொண்டு இருந்த, இயக்குனர் வேலு பிரபாகரன் என்னை நடிகர் ஆக்கினார்."நாளைய மனிதன்-முதல் படம். வீட்டிற்கே தெரியாமல், நடிக்க போய் விட்டேன். மீசை இல்லாமல், வீட்டிற்கு வந்த போது தான் அம்மாவிற்கே தெரிந்தது. திரைத்துறையில் கமல்ஹாசன் எனது "ரோல் மாடல். இதுவரை 8 படங்கள் அவரோடு நடித்து விட்டேன். ஓராண்டில், "குணா உட்பட மூன்று படங்கள் நடித்தேன். ஒரு படத்தில், கரடுமுரடான கேரக்டர். அதற்கு பெரிய மீசை வைக்க ஆசைப்பட்டேன். அப்போது, கமல், "மீசை வைப்பதால் முகத்தில் வில்லத்தனம் வராது; அதனை நடிப்பில் காட்ட வேண்டும் என்றார். இந்த "கல்லை செதுக்கி வைரம் ஆக்கியவர் அவர். இவ்வாறு மனந்திறந்தார்.