ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
தொலைக்காட்சி தொகுப்பாளினி, நடிகை என பல முகங்களை கொண்ட திவ்ய தர்ஷினி அடுத்தக்கட்டமாக ஆடியோபுக் ஊடகத்தின் வழியே கதைகள் சொல்ல வருகிறார்.
லாக்டவுன் காலத்தில் மூக்குத்தி பெண்ணே என்ற பாடலின் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார் திவ்ய தர்ஷினி என்கிற டிடி. தற்போது அவர் ஒரு கதை சொல்லியாக ஆடியோக்புக் ஊடகத்தின் வழியே மக்களிடம் செல்ல இருக்கிறார்.
இது குறித்து அளித்த பேட்டி ஒன்றில், 'லாக்டவுன் காலத்தில் இதை செய்ய வேண்டும் என முடிவு எடுத்தேன். நானே சென்று ஸ்டோரிடெல் ஆப்பில் அப்ரோச் செய்தேன். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். ஒரு என்டர்டெய்னராக எனக்கும் சில பொறுப்புகள் இருக்கிறது. எனவே கதைகளை சொல்லும் போது அதில் என்னுடைய சிந்தனைகளையும் சேர்த்துக் கொள்கிறேன். ஆடியோபுக்குகளை மக்கள் மெனக்கெட்டு கேட்பதில்லை. ஆபிஸ் வேலையோ அல்லது கிட்சனிலோ வேலை செய்து கொண்டே தான் கேட்கிறார்கள். நான் கதைசொல்லும் விதத்தை மேலும் மெருகேற்றி அவர்களுக்கு அந்த கதை முழுமையாக சென்றடைய முயற்சி செய்து வருகிறேன்'. என கூறியுள்ளார்.
ஸ்டோரிடெல் ஆடியோ ஆப்பில் கல்கியின் 'சாரதையின் தந்திரம்' என்ற சிறுகதையை டிடி விவரித்து சொல்ல இருக்கிறார். வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி பாரதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இதற்கான போட்டோஷூட் நடக்கவுள்ளது. இதில் மகாகவி பாரதியின் டச் இருக்குமாறு போட்டோஷூட் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான காஸ்டியூம் டிசைனிலும் டிடி கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.