டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
போட்டியிலிருந்து வெளியேறிய மானசி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்தும், நடுவர்களை குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்றான 'சூப்பர் சிங்கர் சீசன் 8' தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த நிகச்சியில் மானசி எலிமினேட் ஆகியுள்ளார். தனது இனிமையான குரலால் அதிகமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற மானசி தற்போது போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். இது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது குறித்து மானசி தனது இண்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம். நான் சொன்னது போல, நான் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன். நான் அதிகம் மக்களை இதனை மூலம் சம்பாதித்து இருக்கிறேன். என்னுடைய குடும்பம் பெரிதாகி இருக்கிறது. அதற்காக நன்றி மட்டும் சொன்னால் போதாது.
இதற்கு அனுமதி கொடுத்த அப்பா மற்றும் அம்மாவுக்கு முதல் நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்தவர்களுக்கும் நன்றி. ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் என்னை தேர்வு செய்தது எனக்கு கிடைத்த வரம்" என கூறி இருக்கும் அவர் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைய வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்” என கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் நடுவர் அனுராதா ஸ்ரீ ராம் குறித்து, “அவர் என்னுடைய ஏஞ்சல். அவர் எங்களை பார்த்துக் கொள்ளும் விதம், எல்லா போட்டியாளர்களை பேதமின்றி வழி நடத்தும் விதம். அவரது வார்த்தைகளில் இருந்து எனக்கு அதிகம் நம்பிக்கை கிடைத்தது. நான் என்னை நம்பியதை விட அவர் தான் என்னை அதிகம் நம்பினார்” என பதிவிட்டு அனுராதா ஸ்ரீ ராமிற்கு நன்றி கூறியுள்ளார்