அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்து வருகிறார். தர்ஷா குப்தாவின் ஆக்டிங் கேரியருக்கு நல்லதொரு தொடக்கத்தை இந்த கதாபாத்திரம் கொடுத்ததுடன் அதிக அளவு ரசிகர்களை பெற்று கொடுத்தது. இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக போட்டோ போடும் இவருக்கு வாலிப ரசிகர்கள் ஜாஸ்தி. பெரிய நடிகைகளுக்கு இணையாக தர்ஷா குப்தாவை 15 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.
இந்த புகழ் வெளிச்சத்தால் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றிய அவருக்கு, "ருத்ர தாண்டவம்" மற்றும் சன்னி லியோனுடன் மற்றொரு படம் என இரண்டு படங்கள் கைவசம் உள்ளது. இதில் "ருத்ர தாண்டவம்" படத்தில் தர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தனக்கு வெளிச்சம் கொடுத்த செந்தூரப்பூவே சீரியலில் இருந்து தர்ஷா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் தர்ஷா தனது இன்ஸ்டாகிராமில், "எதிரிகள் இல்லையென்றால் நீ இன்னும் இலக்கை நோக்கி பயணிக்கவில்லை என்று அர்த்தம்" என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். சினிமாவில் பிஸியாகிவிட்டதால் சீரியலை விட்டு விலகினாரா? அல்லது வேறு எதாவது காரணமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.