21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் |

கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் கல்லூரி தரப்பிற்கு ஆதரவாக பிக்பாஸ் அபிராமி நிலைபாடு எடுத்துள்ளார். இதன்காரணமாக பலதரப்பினரும் அபிராமிக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக மருத்துவரும் நடிகையுமான டாக்டர்.ஷர்மிளா அபிராமியின் கருத்தை விமர்சித்திருந்தார். அதேபோல மூத்த நடிகையான குட்டி பத்மினியும், அபிராமி திரைத்துறையில் இருந்ததால் அவரை ஒருவர் தொடும்போது தவறாக எந்த உணர்வையும் தராது. ஆனால், மற்ற பெண்களுக்கு அப்படியில்லை என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அபிராமி, சமூக வலைதளத்தில் குட்டி பத்மினி பேசியதை பதிவிட்டு அதற்கு கீழ், 'உலகத்தில் திரையுலகில் உள்ள எல்லா பெண்களும் உங்களை போலவே இருக்கமாட்டார்கள். சினிமாவில் இருந்ததால் உங்களை ஒருவர் தொடும்போது எந்த ஒரு உணர்வும் இல்லை என்று சொல்வது வருத்தமளிக்கிறது. இன்னொரு விஷயம். உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுனா? நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும். நாங்க பாத்துக்கறோம். நீங்க உங்க ஹெல்த்த பாருங்க' என்று பதிவிட்டுள்ளார். இதில், அபிராமி தன்னை நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் என்றும் குட்டி பத்மினியின் பிறப்பை தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். அபிராமியின் இந்த செயலை உச்சபட்ச ஆணவம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.