ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

சின்னத்திரை நடிகர்களான விக்னேஷ் மற்றும் ஹரிப்ரியா, கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானார்கள். இவர்கள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஷூம் ஹரிப்ரியாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதற்கு வேறொரு தொலைக்காட்சியில் ஆன்கர் அசாருடன் ஹரிப்ரியா நெருக்கமாக பழகி வந்ததே காரணம் என புரளி கிளம்பியது. இதை ஹரிப்ரியா அப்போதே மறுத்து பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில் அசார் நல்ல நண்பர் என்ற வகையிலேயே குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த சம்பவங்கள் நடந்து பல நாட்கள் கழிந்த பின்னரும், மீண்டும் அதே அசார் - ஹரிப்ரியா உறவு சர்ச்சையும், ஹரிப்ரியா அளித்த விளக்கமும் புதிய செய்தி போல் மீண்டும் வலம் வருகிறது. மேலும், நடிகர் விக்னேஷ் விவாகரத்துக்கு பின் யூ-டியூப் சேனலுக்கு கொடுத்த இண்டர்வியூ வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், விக்னேஷ், 'காதேலே பண்ணக்கூடாது. காதல் வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் மொபைல் போன் பேட்டர்ன் உங்க பார்டனருக்கும் அவங்களோட பேட்டர்ன் உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்' என கூறுகிறார். இப்படியாக இரண்டு வருடத்திற்கு முன் நடந்த விவாகரத்து சர்ச்சை சோஷியல் மீடியாவை விடாமல் துரத்தி வருகிறது.




