இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
'கண்ணான கண்ணே' சீரியல் ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதிலும், பப்லுவின் கதாபாத்திரம் முதலில் வில்லன் தோற்றத்தில் காட்டப்பட்டு வந்த நிலையில், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பார்க்கவே பாவமாக இருக்கும் பப்லுவின் மீது ரசிகர்களுக்கு ஒரு பாசம் பிறந்துள்ளது. இந்நிலையில் பல நாட்களாக இந்த தொடரில் போட்டோ பிரேமில் மட்டுமே வந்த நடிகை இனியா தற்போது எபிசோடுகளில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கண்ணான கண்ணே தொடரில் கவுதமின் முதல் மனைவியான கவுசல்யா (இனியா) கதைப்படி இறந்துவிடுவார். அவரது போட்டோ மட்டுமே இப்போது வரை முக்கிய கதாபாத்திரமாக நடித்து வந்தது. தற்போது கெளசல்யா கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கவுசல்யா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த ரசிகர்கள் இதனால் குஷியடைந்துள்ளனர். இனியாவின் என்ட்ரிக்கு பிறகு கண்ணான கண்ணே சீரியல் மேலும் பிரபலமாகும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.