டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ரசிகர்களின் ஆதரவுடன் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான அவர், அடுத்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஆபீஸ்' சீரியலில் லீட் ரோலில் நடித்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார். இந்த சீரியல் டிஆர்பி-யில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் கார்த்திக் ராஜ் 2020 டிசம்பர் மாதம் சில காரணங்களால் செம்பருத்தி தொடரிலிருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்ட கார்த்திக் ராஜ், தன்னை படங்களில் நடிக்க விடாமல் சிலர் தடுப்பதாக குற்றம்சாட்டினார். தான் நடிக்க இருந்த ப்ராஜெக்ட்டுகளில் சிலர் பின்வேலைகள் பார்த்து தடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சொந்த முயற்சியில் படம் தயாரிக்க முடிவு செய்த கார்த்திக் ரசிகர்களிடம் உதவிக்கரம் நீட்டினார். அந்த சமயம் போதுமான நிதி கிடைக்காத காரணத்தால் படம் தயாரிப்பது குறித்து எதுவும் பேசாமலிருந்தார். தற்போது அவர் கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார். பல மாதங்கள் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக தனது படத்திற்கான வேலைகள் ஆரம்பமானதை மிகுந்த மகிழ்ச்சியோடு கார்த்திக் ராஜ் தெரிவித்துள்ளார்.




