அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

தான் சிறுமியாக இருந்தபோதே தேவர் மகன் படத்திற்காக இளையராஜா இசையில் போற்றிப்பாடடி பெண்ணே என்ற பாடலை சிலருடன் இணைந்து பாடியவர் ஸ்ருதிஹாசன். தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடி வரும் அவர், கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக உருவெடுத்தார்.
அதையடுத்து 2009ல் லக் என்ற ஹிந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் சூர்யா உடன் 7ம் அறிவு படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்போது வரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பரவலாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், தனது பாய் பிரண்டுடன் நெருக்கமான தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில், தனக்கு 17 வயதாக இருந்தபோது தான் முதன் முதலாக மாடலிங் செய்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். 23வது வயதில் லக் ஹிந்தி படத்தில் அறிமுகமான ஸ்ருதிஹாசனுக்கு தற்போது 35 வயது ஆகிறது.