8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி | இருமுடிகட்டு : அய்யப்பன் மகிமை பேசும் இருமொழிப் படம் | காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுபா பூஞ்சா | பிளாஷ்பேக் : ஹிந்தி ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதிய கருணாநிதி | பிளாஷ்பேக் : தேவரை 'வாழ வைத்த தெய்வம்' | சிக்மா பாடல் டான்ஸ் : நடிக்க ஆசைப்படுகிறாரா ஜேசன் சஞ்சய் | சாய் அபயங்கரின் 3வது 200 மில்லியன் ஆல்பம் | பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் |

இயக்குனரும், தயாரிப்பாளருமான ஷங்கர் மற்றும் நடிகர் வடிவேலு இடையிலான பிரச்னை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர், எஸ்.பிக்சர்ஸ் சார்பில், இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் தயாரித்தார். சிம்புதேவன் இயக்க, வடிவேலு நாயகனாக நடிக்க படம் உருவானது.
ஆனால் இடையில் இயக்குனருக்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பல கோடிகளை இழந்ததாக கூறிய ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பிரச்னை முடியும் வரை வடிவேலுவால் புதுப்படங்களில் கமிட் ஆக முடியாமல் போனது.
தற்போது இப்பிரச்னையை பேசி சுமூகமாக முடித்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை: தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஷங்கர், 23ம் புலிகேசி -2 படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக வடிவேலு மற்றும் ஷங்கரிடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமாக தீர்வு கண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




