உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

தமிழ் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது ஒரு புகார் உள்ளது. இதேப்போல சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் மீரா மிதுன் மீது ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் மீரா மிதுன் எனது படத்தை பயன்படுத்தி என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க தற்போது சிறையில் இருக்கும் மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுக்க எம்கேபி நகர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பட்டியல் இனத்தவர் பற்றிய அவதூறாக பேசிய வழக்கில் தற்போது மீரா மிதுன் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இந்த வழக்கில் மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றபிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இரண்டும் ஒரே காலகட்டத்தில் நடக்கலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.