Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோவாவில் 'பார்ம் ஹவுஸ்' வாங்கிய சமந்தா, நாகசைதன்யா

18 ஆக, 2021 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Samantha---Nagachaitanya-bought-Farm-house-in-Goa

சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலிங்கில் நுழைந்து 'பாணா காத்தாடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி பிரபலமாகும் முன்பே 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் அங்கு அறிமுகமாகி பிரபலமானார்.

தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக, அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தன்னுடன் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து அவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமும், கடற்கரை நகரமுமான கோவாவில் பெரிய ரிசார்ட்டில் 'டெஸ்டினேஷன் வெட்டிங்' ஆக நடந்தது. அதன் பின் அளித்த பேட்டியில் கோவாவில் வசிக்க வேண்டும் என்பது தனது ஆசை என சமந்தா கூறியிருந்தார்.

அதற்காக கோவாவில் ஒரு இடத்தை வாங்க வேண்டுமென அவரும், கணவர் நாக சைதன்யாவும் முயற்சித்தார்கள். தற்போது அங்கு கடற்கரையை ஒட்டி ஒரு இடத்தை வாங்கிவிட்டார்களாம். அங்கு பார்ம் ஹவுஸ் கட்டுவதற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்.

தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் சமந்தா, கோவாவிற்கு தன் இருப்பிடத்தை மாற்றலாம் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயனை விட்டுவிட்டு விஜய்யை டிக் செய்த இளம் இயக்குனர்சிவகார்த்திகேயனை விட்டுவிட்டு ... தியேட்டர்களில் வெளியாகும் 'லவ் ஸ்டோரி' தியேட்டர்களில் வெளியாகும் 'லவ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

DVRR - Kolkata,இந்தியா
18 ஆக, 2021 - 16:54 Report Abuse
DVRR இவங்க பிரியிறாங்க அப்படி இப்படின்னு கொஞ்ச நாள் முன்னாடி செய்தியில் வந்ததே அப்போ என்ன செய்தி வந்தாலும் நம்பக்கூடாதா ???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in