லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி 2018ல் வெளியான கன்னட படம் கேஜிஎப் சேப்டர்1. கன்னட சினிமா சரித்திரத்திரத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய வசூலை அள்ளிய படம். இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
தற்போது கேஜிஎப்: சேப்டர்2 தயாராகி விட்டது. ஹீரோ யஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார். யஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருவன், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, ராட்சசி, கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.