முதல்வர் விஜயை சந்தித்து பார்த்திபன் வைத்த கோரிக்கை | எஸ்.பி.பி பிறந்தநாள்: இளையராஜா, கமல் வாழ்த்து | கயாடு லோஹரை வியந்த மாரி செல்வராஜ்! | இயக்குனர் ஆக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்! | ஹிந்தி பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்! | என்றும் பதினாறாக ஒலித்த கந்தர்வக் குரலோன் எஸ்பி பாலசுப்ரமணியம் | நல்ல கதைக்காக காத்திருந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் | உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'அங்கீகாரம்' | 'பிளடி பாலிடிக்சில்' வெல்வாரா அஞ்சனா நேத்ரன் | பிளாஷ்பேக் : நெகட்டிவ் கேரக்டரில் நடித்த மனோரமா |

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பார்த்திபன் அவ்வப்போது தனது பதிவுகள் குறித்து நெட்டிசன்கள் கொடுக்கும் கமெண்டுக்கும் பதிலளித்து வருகிறார். தற்போது தனது டுவிட்டரில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்பதை கூறும் வகையில், ‛‛நாளை சிரிக்க சிறக்க இன்றும் உள்ளிருப்போம் உறவே'' என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒருவர், ‛உள்ளிருந்தால் உணவு யாரு தருவாங்க?' என்று ஒரு நெட்டிசன் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பார்த்திபன், ‛‛சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தால் உணவை உண்ண நாம் இருப்போம். நாளை இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்'' என்று அந்த நபருக்கு நச் பதில் கொடுத்துள்ளார் பார்த்திபன்.




