டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்தாண்டை விட கொரோனாவின் அலை இந்தாண்டு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, அதன் சுற்றுப்புற மாவடங்களில் இந்நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது விக்ரமின் 60வது படம், சூர்யாவின் 40வது படம், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று அதிகமாவாதல் ஊரடங்கு போன்ற விஷயங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அநேக படங்களின் படப்பிடிப்புகள் இந்தவாரத்தோடு நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.




