10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் 50 சதவீத அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. நேற்று முதல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் தியேட்டர்களில் இரவு காட்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாலைக் காட்சிகளையும் 6 மணிக்கு முன்பாகவே ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு தியேட்டர்கள் தள்ளப்பட்டன.
இந்நிலையில் தியேட்டர்களுக்கு வருவதை மக்கள் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு சில தியேட்டர்களைத் தவிர மற்ற தியேட்டர்களில் இன்றைய காட்சிகள் எதற்கும் முன்பதிவு செய்யப்படவேயில்லை. ஒரு ஊரில் மட்டுமல்ல பல ஊர்களிலும் இதே நிலைதான்.
ஏற்கெனவே, பெரிய படங்களுக்கு மட்டுமே மக்கள் வந்து கொண்டிருந்த நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு வெளியான 'கர்ணன்', அதற்கு முன்பு வெளியான 'சுல்தான்' ஆகிய படங்களின் வசூல் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எப்படியும் அந்தப் படங்கள் 30 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வந்துவிடும் என்பதால் மக்கள் தியேட்டர்களைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
தற்போது பரவி வரும் கொரானோ அலை எப்போது அடங்குகிறதோ அப்போதுதான் மக்கள் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்று அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் மாதம் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட போது என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமை தற்போது வந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.




