டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

‛பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் பல படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தவர், இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். தெலுங்கில் அவர் நடித்துள்ள நாரப்பா(அசுரன் ரீ-மேக்), விராட பர்வம் படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இதுதவிர சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த பிலிம்பேர் நிகழ்ச்சியில் கருப்பு நிற உடையில் கிளாமராக உடையணிந்து பங்கேற்றார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து இருந்தார் பிரியாமணி. இதற்கு ஏராளமான லைக்ஸ்களும், கருத்துகளும் குவிந்தன.
ரசிகர் ஒருவர் பிரியாமணியின் இந்த கிளாமர் போட்டோவை பார்த்து, ‛என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என கேட்டார். அதற்கு, ‛‛எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள். அவர் சம்மதித்தால் நான் உங்களை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறேன்'' என கூலாக பதிலளித்தார் பிரியாமணி. இவரின் இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலானது.




