குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சுந்தர்.சியின் உதவியாளர் கதிர்வேலு இயக்கி உள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், ராதாரவி, தம்பி ராமய்யா, ரேகா, உள்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி கதிர்வேலு கூறியதாவது; இந்த படம் கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டது. இரண்டு எதிர் எதிர் குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைதான் படம். ஒரு குடும்பத்திற்கு விஜயகுமார் தலைவராகவும், இன்னொரு குடும்பத்திற்கு ராதாரவி தலைவராகவும் இருக்கிறார்.
சசிகுமார் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலைக்கு செல்கிற இளைஞராக நடித்திருக்கிறார். இதில் 46 நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இது குடும்ப கதைதான் என்றாலும் நாளை நடக்கப்போகிற ஒரு ஆபத்தை சுட்டிக்காட்டி அதை எப்படி தீர்க்கலாம் என்பதையும் சொல்கிற படம். நவீன தொழில் நுட்பத்தால் விவசாயம் அழிந்து வருகிறது என்பது உண்மைதான். அதே தொழில்நுட்பத்தை ஏன் விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை பற்றியும் சிந்திக்க வைக்கிற படமாக இருக்கும். என்றார்.