இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
கொரோனா தொற்று பரவல் காரணமாக தியேட்டர்கள் எட்டு மாதங்கள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்பதே அதற்குக் காரணம் என திரையுலகில் தெரிவித்தார்கள்.
அதனால், 'மாஸ்டர்' படத்தை எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட வைத்துவிட வேண்டும் என முடிவு செய்து அதை நிறைவேற்றி வருகிறார்கள். ஜனவரி 13ம் தேதியன்று 'மாஸ்டர்' படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தை மட்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் வெளியிட ஒரு சாரார் முயற்சித்தார்கள்.
ஆனால், சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தையும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். இதனிடையே, 'மாஸ்டர்' படம் மட்டுமே தனியாக வெளியாக வேண்டும் என அப்படத்தை வாங்கியுள்ளவர்கள் முயற்சி செய்து வருகிறார்களாம். அதனால், எப்படியாவது 'ஈஸ்வரன்' படத்தை வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
சிம்பு நடித்து வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட பஞ்சாயத்து பிரச்சினையை இப்போது தூசி தட்டி எடுத்துள்ளார்களாம். இதுதொடர்பாக ஏற்கனவே டி.ராஜேந்தர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் ஒரு எச்சரிக்கை அனுப்பியது. அதாவது, ஏஏஏ பட விவகாரத்தை காரணம் காட்டி ஈஸ்வரன் படத்தை வெளிவர விடாமல் தடுக்கும் முயற்சி நடக்கிறது. இதை வன்மையாக கண்டிகிறோம். சொன்ன தேதியில் ஈஸ்வரன் படம் வரும் என கூறப்பட்டிருந்தது. நாளை இந்த விவகாரம் பரபரப்பாகும் எனத் தெரிகிறது.
கொரோனாவுக்குப் பிறகு மீண்டு வர நினைக்கும் சினிமாவை இப்படி சினிமாவில் உள்ளவர்களே கெடுக்கிறார்களே என ஆதங்கப்படுகிறார்கள் சிலர்.