ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
சொன்னதை செய்ய முடியாததால், மன உளைச்சலில் உள்ள ரஜினி, மன நிம்மதிக்காக ஆன்மிக குருமார்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
சரியான ஆளுமை இல்லாமல் தவிக்கும் தமிழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும், கட்சி ஆரம்பித்து, 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார், ரஜினி. ஆனால், கொரோனா அச்சத்தால், அரசியலில் நுழையும் முடிவில் இருந்து பின்வாங்கினார்.கடந்த மாதம், ஐதராபாத் சென்ற ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு படக்குழுவினருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது.
மேலும் ரத்த அழுத்த பிரச்னை காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, உரிய சிகிச்சைக்கு பின், வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, கட்சி ஆரம்பிப்பதில் இருந்து பின்வாங்கினார். ஆனாலும், ரசிகர்களையும், நிர்வாகிகளையும் ஏமாற்றி விட்டோமோ என்ற மன உளைச்சலில், அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி வீட்டுக்கு, நமோ நாராயணா சுவாமிகள் வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்ற ரஜினிக்கு,ஸ்படிக மாலையை அணிவித்து, ஆசிர்வதித்து, அவருடன் சிறிது நேரம் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த படங்கள், தற்போது இணையதளத்தில் உலா வருகின்றன. ஆன்மிக அரசியலை அறிவித்த ரஜினி, தற்போது மன நிம்மதிக்காக, ஆன்மிக பயணம் மேற்கொள்வார் என, தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கும் ரஜினி, விரைவில் தனது அன்மிக பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.